Wednesday, May 21, 2008

நான் சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றிருந்தேன். ஒரே இடத்தில் நகராமல் நின்று கொண்டு பெருமாளையும் நடராஜரையும் தருசிக்கலாம்.மிக அருமையான கோவில் முழுதும் தீட்சிதர்களாலேயே பராமரிக்கபடும் கோவில். இந்த விவரமே என்னை மிக ஆச்சிரிய படுத்தியது. இந்த கோவிலில் உண்டியல் கிடையாது. எனென்றால் உண்டியல் உள்ள கோவிலை அறநிலையத்துறை சுலபமாக கையகபடுத்தலாமாம்.
பிறகு எப்படி இந்த கோவில் செயல்படுகிறது என்றால், இங்குள்ள 300 திட்சிதர் குடும்பங்களில் தினம் ஒரு குடும்பத்தினர் மேடையில் பூஜை செய்கின்றனர்.பூஜை செய்யும் குடும்பத்தினர் கோவிலுக்கு ரூபாய் 2000 கொடுக்கவேண்டுமாம் அது கோவில் பராமரிப்புக்கு,தட்டில் விழும் பணம் அவர் குடும்பத்திற்கு.
அதனால் தானோ என்னமோ கோவில் முழுதும் சுத்தமாக இல்லை.நாய்கூட முன்வாசல் தாண்டி உள்ளெ வருகிறது.
ஒன்றிரண்டு முறை அறநிலையத்துறை கையகபடுத்த நினைத்தும் அரசாணை பாதியிலேயே கைவிடப்பட்டதாம்.
குறிப்பு:
ஒரு குடும்பத்திற்கு ஏறக்குறைய முந்நூறு நாட்களுக்கு ஒருமுறை பூஜை செய்ய அனுமதிக்க படுவதால் ஆடவர்களுக்கு மிக சிறு வயதிலேயே திருமணம் செய்து அவர்களும் ஒர் குடும்பமாக காட்டபடுகிறார்கள் என்பது ஆதாரமில்லாத செய்தி

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in